விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை: அமைச்சர் வசந்த சமரசிங்க
தனியார் துறையும் ச.தொ.ச வும் 130 ரூபாவுக்கு வெங்காயத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் வரியுடன் பொறிமுறை தயாரிக்கப்பட்டது. இதிலிருந்து வெங்காய விலை உயரவும், குறைவடையவும் செய்தது.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகள் உட்பட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-11-2025அன்றுநடைபெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்றத்தை பயன்படுத்தி இல்லாத விடயங்களை இவர்கள் கூறுகின்றனர். இந்த காலப்பகுதியில் கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் திகதியே கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரி அறவிடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியிலேயே வெங்காய அறுவடை நடக்கும். இதன்படி கொப்பேகடுவ விவசாய ஆய்வு நிறுவனத்தால் கிழங்கு மற்றும் வெங்காயம் தொடர்பில் செலவுகளை மதிப்பீடு செய்து அவற்றை கொள்வனவு செய்வதற்கான விலை பொறிமுறையையும் தயாரித்தது.
தனியார் துறையும் ச.தொ.ச வும் 130 ரூபாவுக்கு வெங்காயத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் வரியுடன் பொறிமுறை தயாரிக்கப்பட்டது. இதிலிருந்து வெங்காய விலை உயரவும், குறைவடையவும் செய்தது. ஆனால் மழை நிலைமையுடன் வெங்காய விலை வீழ்ச்சியடைந்தது.
அதன்படி அரசாங்கம் என்ற வகையில் கடந்த ஒன்றரை மாதங்களாக வெங்காயம் மற்றும் கிழங்கு விலைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனாலேயே இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நீண்ட கால திட்டத்திற்காக களஞ்சிய வசதி மற்றும் கொள்வனவு செயற்பாட்டுக்காக 17 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நியயமான தீர்வுகளை காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.





