அமெரிக்க மக்களுக்கு வரும் இருவாரங்கள் மோசமானதாக இருக்கும் - டிரம்ப்
இதுநாள் வரையில் இப்படிப்பட்ட சூழலை அமெரிக்க பார்த்திராது என்றும் கூறியுள்ளார்.
👤 Sivasankaran5 April 2020 1:36 PM GMT

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பரவி அதிகளவில் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் பாதிப்பு அமெரிக்காவில் மிக அதிகளவில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 311,635- பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 8,454 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க மக்களுக்கு அடுத்த இரு வாரங்கள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படலாம். இதுநாள் வரையில் இப்படிப்பட்ட சூழலை அமெரிக்க பார்த்திராது என்றும் கூறியுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire