போர்த்துக்கல் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகை
அமைச்சர், துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
போர்த்துக்கல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பவுலோ ரேஞ்சல், சிரேஷ்ட அதிகாரிகள் நால்வரை கொண்ட தூதுக்குழுவுடன் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்தார்.
அமைச்சர், துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அமைச்சர் மற்றும் அவருடன் வந்திருந்த பிரதிநிதிகள் குழுவை வரவேற்கும் நிகழ்வு, கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட அதிதிகள் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் பல்வேறு ஒத்துழைப்பு துறைகள் தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
போர்த்துக்கல் மற்றும் இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமையும் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த விஜயமாக கருதப்படுகிறது.





