கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயினில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,235 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,982 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,285 அந்த நோயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா(86) தெரசா பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.