அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே, அதாவது 1000 யார்டுகள் வரை நெருங்கி அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்தது.
உடனடியாக அந்த விமானத்தை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால், அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.