
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது, கருத்து கணிப்பில் தெரியவந்து உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவம்பர், 3ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஓட்டுரிமைஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில், 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.இந்நிலையில், அதிபர் தேர்தல் பற்றி, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம், இந்திய வம்சாவளியினர் மற்றும் ஆசிய அமெரிக்கர்கள் அமைப்பு, கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியர்களிடம், ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, 66 சதவீத இந்தியர்கள், ஜோ பிடனுக்கும், 28 சதவீத இந்தியர்கள், டிரம்புக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த, 2016 அதிபர் தேர்தலில், 77 சதவீத இந்தியர்கள், ஹிலாரி கிளின்டனுக்கும், 16 சதவீத இந்தியர்கள், டிரம்புக்கும் ஓட்டளித்தனர். இதற்கிடையே, அதிபர் தேர்தல் பிரசாரத்தில் கொரோனா பரவல் முக்கிய இடம் பிடித்துஉள்ளது.