Home » முதன்மைச் செய்திகள் » கடும் பனிப்பொழிவால் ரொறொன்ரோவில் விபத்துகள் அதிகரிப்பு

கடும் பனிப்பொழிவால் ரொறொன்ரோவில் விபத்துகள் அதிகரிப்பு

ரொறொன்ரோவில் பனிப்பொழிவால் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

👤 Sivasankaran3 Jan 2019 11:58 AM GMT
கடும் பனிப்பொழிவால் ரொறொன்ரோவில் விபத்துகள் அதிகரிப்பு
Share Post

கனடா - ரொறொன்ரோவில் பனிப்பொழிவால் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.ரொறொன்ரோவின் கிறேட்டர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மட்டும் 50க்கும் மேற்பட்ட விபத்துகள் பதிவாகியுள்ளன.

அண்மைய கருத்துக்கணிப்பில் நிமிடத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் வாகனங்கள் மோதிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகள் பனி மூட்டத்தால் காட்சியளிக்கின்றன. இதனால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன. இதனால் பனிக்காலத்தில் வாகனங்களில் பயணிப்பது தொடர்பாக சிந்தித்து செயல்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.கடும் பனிப்பொழிவால் ரொறொன்ரோவில் விபத்துகள் அதிகரிப்பு