Home » உலகச் செய்திகள் » கட்டலோனியா மற்றும் குர்தீஷ்தான் வாக்கெடுப்பு

கட்டலோனியா மற்றும் குர்தீஷ்தான் வாக்கெடுப்பு

இந்நூற்றாண்டில் துவங்கும் ஆதிக்க அரசுகளின் அடக்குமுறைக்கு எதிராக ஒரு சுதந்திரப்போராட்டம்

👤 Saravana21 Oct 2017 10:29 AM GMT
கட்டலோனியா மற்றும் குர்தீஷ்தான் வாக்கெடுப்பு
Share Post

ஈராக்கில் உள்ள குர்திஷ் மாகானம் மற்றும் ஸ்பெயினில் உள்ள கட்டலோனியா மாகானத்தின் பகுதியில் நடந்த சுதந்திர நாட்டிற்கான வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஷ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ்மக்களும்; கட்டலோனியாவை தனி நாடு உருவாக வேண்டும் என்று கட்டலோனியர்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எப்போதும்போல் ஈராக்கும்,ஸ்பெயினும் மக்களின் சுதந்திரஉணர்வை அடக்கிஆளும் வழிமுறைகளைக் கையாண்டுள்ளது.
குர்திஷ்களும் கட்டலோனியர்களும் இருவேறு மாறுபட்ட நிலவியல் பின்னனியில் வருபவர்கள் என்றாலும், அவர்களுடைய உரிமை முழுக்கங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. கட்டலோனியா மக்களாட்சியின் பிறப்பிடம் என் அழைத்துக்கொள்ளும் ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கிறது. குர்தீஷ் மாகானம் மன்னராட்சியின் கொடிய அனல் காற்று வீசும் அரபு பிராந்தியத்தில் உள்ளது. கட்டலோனியர்கள் நூறாண்டுக் காலமாக இருந்துவரும் தமது தாய் மண்ணிற்கான உரிமையை முன்பே வென்றெடுத்தார்கள். இவர்களின் சுயாட்சி உரிமைகளை ஸ்பெயின் அரசு பறிக்க முயன்றபோது தங்களுக்கென்று தனிநாடு கோரிக்கையை முன்வைத்து நகரத்துவங்கியுள்ளனர்.
குர்திஷ் மக்களின் நிலை வேறானது. குர்திஷ்தான் ஈராக், ஈரான், சிரியா, துருக்கி போன்றநாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.. மேற்காசியாவின் பலமான ஆளுமைக்குணம் மிக்க இனங்களான துருக்கியர், அரபு, மற்றும் பெர்ஷியார் எனப்படும் பாரசீகர்கள் போன்றோர் குர்தீஷ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஏற்கத் தயாராக இல்லை. தொடர்ந்து பாரிய இனப்படுகொலை மற்றும் அடக்குமுறைகள் மூலம் குரோஷியர்களின் உரிமைப்போராட்த்தை அடக்கியே வந்தனர். வளைகுடாப்போர் அதன்பிறகு எழுந்த அரசியல் குழப்பம் போன்றவற்றை சாதமாக பயன்படுத்திக்கொண்ட குர்தீஷ் தலைவர்கள் தங்களுக்கென ஒரு மாகானத்தை அமைத்தனர். இந்த மாகானத்தை தனி நாடாக ஏற்க விரும்பும் வாக்கெடுப்பை ஈராக் அரசே நடத்தியது
ஈராக் மட்டுமல்ல சிரியா மற்றும் துருக்கி பகுதியில் உள்ள மக்கள் தங்களின் உள்ளக்கிடக்கையை ஈராக் பகுதி குர்திஷ் மக்கள் மூலம் வெளிப்படுத்தி விட்டனர். செப்டம்பர் 25-ல் நடந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட குர்தீஷ் மக்கள் தனிநாடு வேண்டும் என வாக்களித்து தங்கள் உரிமை முழக்கத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ளனர்.
கட்டலோனியாவைப் பொறுத்தவரை 1-ம் தேதி நடந்த வாக்கெடுப்பு சட்டவிரோதம் என்று ஸ்பெயின் அரசு கூறினாலும், கட்டலோனிய மாகாணத்தலைவர் கார்லஸ் பியுஜிஸ்-டி-மாண்டோ உள்ளிட்டோர் ஸ்பெயின்அரசின் கருத்தை ஏற்காமல் வாக்கெடுப்பை நடத்தினார்கள்.
ஸ்பெயின் பிரதமர், ஸ்பானிய அரசியல் தலைவர்களின் ஆணவப்போக்கும் ஸ்பானிய இனவாத தலைவர் மரியா-னா-ரஜோயின் மிரட்டல்களும் ஸ்பானிய காவல்துறையின் தாக்குதல்களும், ஸ்பெயின் பெரும்பாலான மக்களை சுதந்திரத்துக்கு ஆதரவானவர்களாக மாற்றிவிட்டது. வாக்களித்தவர்களில் 92% பேர் சுதந்திரம் வேண்டும் என்று வாக்களித்தனர்.
இனி வரும் காலத்தில் அரசியல் சூழல்
கட்டலோனியா மற்றும் குர்திஷ்தான் இந்த இரண்டு நிகழ்வுகளும் உலக அரங்கில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கியுள்ளன. முதலாளித்ததுவ நாடுகளான அமெரிக்க உட்பட சில நாடுகள், குர்திஷ்தான் வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை.
இன்றையச்சூழலில் வல்லரசுகளுக்கு இடையேயான போட்டியில் ஏதேனும் ஒரு பக்கத்தில் இருந்தால்தான், உரிமைப்போராட்டங்கள் வெற்றிபெறுகின்றன என்று கருதப்படுகிறது. சமீபகாலத்தில் தனியாக பிரிந்து சென்ற தெற்கு சூடான், கோசாவா போன்றவைகூட மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
அதே நேரத்தில் சுயலாபத்துடன் நோக்கும் அரசுகளின் பார்வையில் ஈழப்போராட்டம் கூட ஒரு பயங்கரவாதம் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டி உரிமைப்போராட்டத்தை கொடூரமாக முடித்துவைக்க முடியும் என்பதையும் நாம் 2009-ஆம் ஆண்டு மத்தியில் பார்த்துவிட்டோம்
அய்ரோப்பாவின் தன்னாட்சி உரிமை முழக்கம் என்பது நீண்ட நெடிய போராட்டக்களமாகவே இருந்தது, இந்த நீண்டகால தாக்கத்தால்தான் ருஷ்ய அய்க்கிய குடியரசு உடைந்தது, யூகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா உடைந்து பல சுந்தந்திர நாடுகள் உருவாயின. பிற கண்டங்களில் உரிமைப் போராட்டத்தை இனவாதப்போக்கு என்று திசைதிருப்பி அடக்கி வைத்துவிடுகிறது.
ருஷ்யா மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளை உடைத்து தனிநாடு என்ற உரிமை முழக்கம் , ஸ்பானிய, பிரிட்டானிய மன்னராட்சியில் கீழ் இருந்து மக்களாட்சி மலர்ந்தவைகள் தங்கள் நாட்டில் எழும்போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மன்னராட்சி மற்றும் தற்போது வலிமைமிகுந்த வல்லரசு நாடுகள் தங்களுடைய தேவைக்கு ஏற்பவே நாடுகளை உருவாக்குகின்றனர்.
கட்டலோனியாவைத் தொடர்ந்து மேற்கு ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் பகுதிகளில் வாழும் போஸ்க்(புனித சவேரியார் இந்த போஸ்க் இனத்தைச்சேர்ந்தவர்கள்) இனமக்களும், ஸ்காட் இனமக்களும் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்கத் துவங்க்கி உள்ளனர். ஆனால் போர்ச்சுகல், ஸ்பயின் மற்றும் பிரிட்டன் அரசு ஆரம்பத்திலேயே இந்த உரிமைக்குகுரலை நசுக்கும் வேலைகளில் இறங்கிவிட்டது.
வல்லரசுகளுக்குச் சவால்
அய்ரோப்பாவின் நிலை இப்படி என்றால் அரசு பிராந்தியத்தில் உள்ள குர்திஷ்தான் நிலை வேறாக உள்ளது. ஈராக், ஈரான், சிரியா, துருக்கி போன்ற நாடுகளுக்குள் ஆயிரம் பிணக்கு இருக்கலாம். ஆனால் குர்திஷ்தான் நாடு மலர்ந்துவிடக் கூடாது என்பதில் இந்த நாடுகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.
ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதில் குர்திஷ்களின் பெஷ்மர்கா படையினரின் பங்கு அதிகம். குர்திஷ் பகுதி தனிநாடாகச் செல்லவேண்டும் என்று இம்மக்கள் உறுதியாக முடிவெடுத்தபோது அமெரிக்காவும் குர்தீஷ் மாகாணத்தை கைவிட்டு விட்டது.
வல்லரசுகளின் கைப்பாவையாக மாறும் நாடுகளில் மக்கள் உரிமை காணாமல் போகும், அப்படி காணாமல் போகும் போது புரட்சி வெடிக்கும் இந்தப் புரட்சியை குறுகிய காலத்தில் வேண்டுமானால் மிரட்டி அடக்கிவிடலாம் ஆனால் நீண்டகாலம் உரிமை வேட்கையை குலைக்க முடியாது.
காலனி ஆதிக்கத்தில் இருந்து ஒரு சுதந்திரப்போராட்டம் கடந்த நூற்றாண்டில் முடிந்துவிட்டது, இந்த நூற்றாண்டில் ஆதிக்க அரசுகளின் அடக்குமுறைக்கு எதிராக ஒரு சுதந்திரப்போராட்டம் மலரும். இதை கட்டலோனியா மற்றும் குர்திஷ்தான் மக்கள் உணர்த்திவிட்டனர்.

Tags