பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தமது கடமைகளை அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.
களனி ரஜமகாவிகாரையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
13 ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அலரி மாளிகையில் நடந்த நிகழ்வில் அவர் முதலாவது கையெழுத்தை இட்டு பணிகளை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பௌத்த பிக்குகள், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண ஆளுநர்கள், மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவானோர் பங்கேற்றனர்.