ஓராண்டாக அவர் தீவிர அரசியலில் இருந்து முதுமையால் ஒதுங்கியுள்ளார். முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்
கடந்த சில மாதங்களாக கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து செல்கின்றனர். முரசொலி அலுவலகம் மற்றும் அறிவாலயத்துக்கும் அவர் வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக ட்ரக்யோஸ்டமி குழாய் இன்று மாற்றப்பட்டது. சிறிய அளவிலான ட்ரக்யோஸ்டமி குழாய் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கலைஞர் கருணாநிதி மீண்டும் கரகர குரலில் உடன் பிறப்பே எனக் கூறி மேடையேறும் நாளை நெருங்கிவிட்டது.