கொரோனா வைரஸ் - கத்தார் நாட்டிற்கும் பரவியது
79 ஆயிரத்து 251 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
👤 Sivasankaran1 March 2020 1:29 PM GMT

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 2 ஆயிரத்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்து 251 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவியுள்ள ஈரான் நாட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை கத்தார் நாட்டை சேர்ந்தவர்களை மீட்டு சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றனர். அவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்த பரிசோதனையில் ஈரானில் இருந்து கத்தார் திரும்பிய 36 வயது நிரம்பிய நபருக்கு கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கத்தாரிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire