கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க திரையுலகம் முடங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால், இன்று இந்தி, தமிழ் என எந்தவொரு மொழிப்படமும் இந்தியாவில் வெளியாகவில்லை.
மேலும் மார்ச் 19 முதல் 31 வரை இந்தியாவில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒட்டுமொத்த திரையுலமும் முடங்கியுள்ளது.