கொரோனா வைரஸ் தொற்று - குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இதுவரை 1027 பேர் சிறிலங்காவில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
👤 Sivasankaran20 May 2020 3:43 PM GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 1027 பேர் சிறிலங்காவில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 434 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire