Home » உலகச் செய்திகள் » கனடாவை வாட்டி வதைக்கும் குளிர்

கனடாவை வாட்டி வதைக்கும் குளிர்

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.

👤 Sivasankaran21 Jan 2019 5:55 PM GMT
கனடாவை வாட்டி வதைக்கும் குளிர்
Share Post

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.

இன்று (திங்கட்கிழமை) கனடாவில் வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சில பகுதிகளில் மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.