திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்தி பணிகளை விரைவுப்படுத்த எதிர்பார்ப்பு - வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
'தற்காலிக தீர்வுகள் நிலையானவை அல்ல. உலகளாவிய வலுசக்தி நிலைமையைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோகத்தை கையாள்வதற்கு எமக்கு நீண்டகால அடிப்படையிலான மூலோபாயத் திட்டமிடல் அவசியமாகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்திப்பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம் இலங்கையின் தற்போதைய வலுசக்தி நெருக்கடிக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவுடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருப்பதாக 'த இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பாரிய எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதியை கட்டமைப்பதற்கு ஏதுவான இத்திட்டம் எரிபொருள் விநியோக சவால்களைக் கையாள்வதற்கான ஒரு நிரந்தர தீர்வாக நோக்கப்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
'தற்காலிக தீர்வுகள் நிலையானவை அல்ல. உலகளாவிய வலுசக்தி நிலைமையைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோகத்தை கையாள்வதற்கு எமக்கு நீண்டகால அடிப்படையிலான மூலோபாயத் திட்டமிடல் அவசியமாகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலையை ஒரு பிராந்திய வலுசக்தி மையமாகக் கட்டியெழுப்புவுதை இலக்காகக்கொண்டு கடந்த 2025 ஏப்ரல் மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்தே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.