அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
விவாதத்தின் முடிவில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவரான சாணக்கியன் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பைக் கோரினார்,
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகாலச் சட்ட அமலாக்கத்தை மேலும் நீடிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நீட்டிக்கப்பட்டது.வாக்கெடுப்பில் ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் 09-04-2026 அன்று முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது. விவாதத்தின் முடிவில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவரான சாணக்கியன் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பைக் கோரினார்,
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் அரச தரப்பினர் ஆதரவாக வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,அதன் பங்காளிக்கட்சிகள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி .சுயேட்சைக்குழு 17, புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை எதிர்த்து வாக்களித்தன.
இதற்கமைய அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக137 வாக்குகளும் எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 110 மேலதிக வாக்குகள் ஆதரவுடன் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டது.





