Home » கேளிக்கை » அசுரன்' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு

அசுரன்' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு

பாடல்கள் தயார் நிலையில் உள்ளது.

👤 Sivasankaran17 Aug 2019 3:02 PM GMT
அசுரன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு
Share Post

'அசுரன்' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகின்றார். தனுஷ்க்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பணிகளை முடித்து போஸ்ட் புரோடக்ஷனில் கவனம் செலுத்தவுள்ளனர். பாடல்கள் தயார் நிலையில் உள்ளது என இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.

இத்திரைப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 4ம் திகதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.