Breaking News
22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதை நீதி அமைச்சர் நிறுத்தி வைத்தார்
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான நிச்சயமற்ற தன்மையை அகற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான நிச்சயமற்ற தன்மையை அகற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.





