திலும் அமுனுகமவை கைது செய்யக் கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் முறைப்பாடு
சிறுமியின் சாட்சியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அவரின் சமூக நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பாதுகாக்கும் நோக்குடனேயே இத்தகைய கருத்துக்கள் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவினால் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம வெளியிட்ட கருத்துக்கு எதிராக குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் நேற்று முறைப்பாடு ஒன்று கையளித்தது.
சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் அமைப்பாளர் செயலாளர் ஹேமமாலி அபேரத்னவினால் அதிகாரசபையின் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த முறைபாட்டில் குறிப்பிடுகையில், திலும் அமுனுகமவினால் நேற்று வெளியிடப்பட்ட இந்த கூற்றானது, பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அவரின் சமூக நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பாதுகாக்கும் நோக்குடனேயே இத்தகைய கருத்துக்கள் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
திலும் அமுனுகமவின் இந்த செயல்பாடானது 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டம், 2023 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை உதவி செய்வதற்கும் பாதுகாப்பதற்குமான சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் 354-ஏ, 354-பி மற்றும் 365-சி ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி திலும் அமுனுகமவை உடனடியாகக் கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடுமாறும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு உடனடியாக தலையிடுமாறும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையிடம் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது என்றார்.





