காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம்: உலக சுகாதார அமைப்பு
அவசரநிலைக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பாக தலைமை இயக்குநர் அறிவிப்பது இதுவே முதல்முறை.
ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதேநேரத்தில் உலக அளவில் தொற்று குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெசஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் அறிவித்தேன். அவசரநிலைக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பாக தலைமை இயக்குநர் அறிவிப்பது இதுவே முதல்முறை. சர்வதேச சுகாதார வழிமுறைகள் சட்டம் 12-ன் கீழ் இந்த நடவடிக்கையை நான் எடுத்தேன்.
காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடனான ஆலோசனைகளுக்கப் பிறகு தேவையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. என்று தெரிவித்துள்ளார்.





