Breaking News
காணாமல்போனோர் பற்றிய அலுவலக உறுப்பினராக ஜெயதீபா புண்ணியமூர்த்தி – அரசியலமைப்பு பேரவை அனுமதி
அரசியலமைப்புப்பேரவை அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் 22-05-2026 அன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கூடியது.
காணாமல்போனோர் பற்றிய ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜெயதீபா புண்ணியமூர்த்தியை நியமிப்பதற்கு அரசியலமைப்புப்பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்புப்பேரவை அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் 22-05-2026 அன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கூடியது.
அதன்படி காணாமல்போனோர் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு முன்மொழியப்பட்ட பெயர் பரிந்துரைகளை பரிசீலனை செய்த அரசியலமைப்புப்பேரவை, அதன் உறுப்பினராக மட்டக்களப்பைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரும், வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவருமான ஜெயதீபா புண்ணியமூர்த்தியை நியமிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.





