பிரதமர் தலைமையில் குழுவை அமையுங்கள்: கயந்த கருணாதிலக்க
கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 6வீதத்தை ஒதுக்குமாறு தெரிவித்து அன்று மாணவர்களை வீதிக்கிறக்கியவர்களே இன்று ஆட்சியில் இருக்கிறார்கள்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி மக்களுக்கு அளித்த வாக்குறுதுயை விரைவாக நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் தேர்தலை தொடர்பில் கலந்துரையாட பிரதமர் தலைமையில் குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயரை கேட்டுக்கொள்கிறோமென எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 13-11-2025 அன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாகாணசபை தேர்தலை ஒரு வருடத்துக்குள் நடத்துவதாகவே அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும்போது,மாகாணசபை தேர்தலை எப்போது நடத்தப்போகிறீர்களென எமது கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதியிடம் கேட்டபோது, மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ஒதுக்கி இருக்கிறேன். தேர்தலை நடத்தும் திகதியை என்னால் தீர்மானிக்க முடியாது. பாராளுத்தில் இருக்கும் அனைவரும் இணைந்து அதற்கு சட்டம் ஒன்றை அனுமதித்து தருமாறு தெரிவித்தார்.
அதனால் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயரை கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு வருடத்தில் மாகாணசபை தேர்தலை நடத்துவதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எமது பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம். அதனால் பழைய முறைக்காவது தேர்தலை நடத்தி, மாகாண சபையை அமைப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.
மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அடுத்த வருடத்துக்காக முன்வைத்திருக்கும் வரவு செலவு திட்டம் கானில் விழாவில் பாதல கிணற்றில் ஓடும் மோட்டார் சைக்கிளைப்போன்றதகும். அது பாரிய சத்தத்துடன் எத்தனை சுற்றுக்கள் ஓடினாலும் இறுதியில் ஒரு இடத்திலே இருக்கிறது. அதேபோன்றே ஜனாதிபதி நான்கரை மணி நேரம் வரை பாரிய சத்தத்துடன் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தாலும் ஒரு இடத்தில் சுற்றிக்கொண்டு இருப்பதாகவே மக்கள் கதைக்கின்றனர்.
நாட்டை ஆட்சி செய்த பல அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் முவைக்கப்படும் முன்மொழிவுகளில் பலவற்றை செயற்படுத்தி இருக்கின்றன. ஒருசில விடயங்கள் செயற்படுத்த முடியாமல் போயிருக்கும்.
ஆனால் இந்த அரசாங்கம் 2025ஆம் ஆண்டுக்காக முன்வைத்த வரவு ,செலவு திட்டத்தின் மூலதன செலவில் நூற்றுக்கு 60வீதத்துக்கு அதிகம் அரசாங்கத்துக்கு செலவிட முடியாமல் போயிருக்கிறது.2025 வரவு செலவு திட்டத்தில் 54 முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதில் நூற்றுக்கு16 முன்மொழிவுகளின் முன்னேற்றம் நூற்றுக்கு 25வீத்துக்கும் குறைவாகும். அரசாங்கத்தின் இயலாமை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கடந்த வருடம் முன்வைத்த வரவு செலவு திட்டத்தின் சில பிரேரணைகள் இந்தமுறை வரவு, செலவு திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் இவற்றை செயற்படுத்த முடியாமல் போயிருக்கிறது. அதனால் இந்தமுறை சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்ட பிரேரணைகளிலும் அதிகமான விடயங்களை அடுத்த வருடத்தில் சமர்ப்பிக்கும் வரவு செலவு திட்டத்திலும் சேர்த்துக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜனாதிபதி அடிக்கடி தெரிவித்து வரும் விடயம்தான், எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் அனைத்து விடயங்களையும் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என்பதாகும். ஆனால் இந்தமுறை வரவு வரவு செலவு திட்டத்தில் அதற்காக 16 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கத்துக்கும் அமைச்சர்களுக்கும் வாகனம் கொள்வனவு செய்வதற்காக 12.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இருக்கிறது.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பாரிய அர்பணிப்பு செய்தவர்கள்தான் ஆசிரியர்கள். இதற்கு காரணம், ஆட்சிக்கு வந்தால், சம்பள முரண்பாட்டை நீக்குவதென்ற வாக்குறுதியாகும். அதனால் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை போக்குவதற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம்.
மேலும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாச புத்தகங்களுக்கான வரியை முற்றாக நீக்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தால்கள. ஆனால் அரசாங்கம் இரண்டாவது தடவையாக முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்திலும் இதனை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கிறது.
கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 6வீதத்தை ஒதுக்குமாறு தெரிவித்து அன்று மாணவர்களை வீதிக்கிறக்கியவர்களே இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். இதற்காக பாதயாத்திரை சென்ற பிரதமர் உள்ளிட்ட பலர் தற்போது அமைச்சுப்பபதவிகளை வகித்து வருகிறார்கள்.ஆனால் கல்விக்காக ஒதுக்கிய செலவை தெரிவிப்பதற்கு கவலையாக இருக்கிறது..
வேலையற்ற பட்டதாரிகளை வீதிக்கு இறக்கி இவர்கள், இன்று அந்த பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு வரும்போது, வீதிக்கு வராமல் படிக்குமாறு தெரிவிக்கின்றனர்.அரசாங்கம் தங்களை ஆட்சிக்கு கொண்டுவர செயற்பட்டவர்களை நிராகரிப்பது குறித்து நாங்கள் கவலையடைகிறோம். அவர்கள் தொழிலல் கேட்டு போராடும்போது மாேதிப்பார்ப்போம் என அரசாங்கம் தெரிவிக்கிறது என்றார்.





