இடைநீக்கிய சாரதிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை தாமதமின்றி மீளாய்வு செய்யுங்கள் - அமைச்சர் பிமல்
இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த சாரதிகளில் சிலர் தனியார் பேருந்துகளுக்கு ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருமானம் ஈட்டி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
செய்யப்பட்ட சாரதிகள் சம்பளம் பெற்றுவருகின்றமை மற்றும் தனியார் துறையில் பணியாற்றுகின்மை தொடர்பில் தேவையான சட்ட ஆலோசனையை உடனடியாகப் பெற்று, ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சில சாரதிகள் தொடர்ந்து சம்பளம் பெற்று வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆலோசனைக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டதோடு பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைப் பிரச்சினைகள் காரணமாக சுமார் 400 முதல் 500 சாரதிகள் இதுவரையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கான சம்பள இடைநிறுத்தமானது, பல்வேறு நிபந்தனைகளின் கீழ் உள்ள சட்ட நடைமுறைகளின் காரணமாக நிகழ்ந்துள்ளதாக அக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த சாரதிகளில் சிலர் தனியார் பேருந்துகளுக்கு ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருமானம் ஈட்டி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, போக்குவரத்துத் துறையின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தி அதனை ஒரு நேர்மறையான திசையில் வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள துணைக் குழுவின் இறுதி அறிக்கையும், ரயில்வே திணைக்களத்தை வினைததிறனான மற்றும் திருப்திகரமான சேவை வழங்குநராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட துணைக் குழுவின் இடைக்கால அறிக்கையும் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





