எரிபொருள் விலையை அதிகரிக்காவிடின் முழு கட்டமைப்பும் பாதிக்கப்படும் - வலுசக்தி அமைச்சு
உலக சந்தையின் விலைக்கு அமைவாகவே எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை அமுல்படுத்தப்பட்டுள்ளன.தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்காவிடின் முழு எரிபொருள் விநியோக கட்டமைப்பும் பாதிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 01-06-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமையினால் எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தின் போது சுத்திரகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தின்போது அரசாங்கத்தாலும் ஒரு தொகை நிதி செலவழிக்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகத்தின் போது விற்பனை விலையின் ஒரு தொகையை திறைசேரி ஏற்றுக்கொண்டுள்ளது.இதற்காக மாத்திரம் 57 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.டீசல் ஒரு லீற்றரின் உண்மை விற்பனை விலை 536 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் 407 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட்டது.129 ரூபாவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட சகல எரிபொருளுக்குமான விலையின் போது ஏற்படும் நட்டத்தை திறைசேரி ஏற்றுக்கொண்டுள்ளது.எரிபொருள் விநியோகக் கட்டமைப்பை தடையின்றி முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை திருத்தப்படுகிறது.
எரிபொருள் விநியோகக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை அமுல்படுத்தப்பட்டுள்ளன.தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்காவிடின் முழு எரிபொருள் விநியோக கட்டமைப்பும் பாதிக்கப்படும்.
உலக சந்தையின் விலைக்கு அமைவாகவே எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது. உலக சந்தையில் விலை குறைவடைந்தால் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குவோம்.
எரிபொருள் நுகர்வை இயலுமான வகையில் பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஓரிரு மாதங்களில் மத்திய கிழக்கின் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.





