ஹர்ஷ டி சில்வா எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம்
ஆரசியலiமாப்பா அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் பிரகாரம் அரச நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றம் வசமுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதால் அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முன்னெடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாராளுமன்ற நிதி கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் தாமதமில்லாமல் தகுதியான ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இயற்கை அனர்த்தங்களால் நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் பதவி டிசெம்பர் 07 ஆம் திகதியில் இருந்து வறிதாகியுள்ள நிலையில் கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்கும் தலைவர் இல்லாத காரணத்தால் பல சிக்கல்கள் தொற்றம் பெற்றுள்ளன.
ஆரசியலiமாப்பா அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் பிரகாரம் அரச நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றம் வசமுள்ளது. பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை சிறந்த முறையில் வினைத்திறாக செயற்படுத்துவதற்கு சுயாதீன கணக்காய்வாளர் பதவி அத்தியாவசியமானதாக உள்ளது.
அதேபோல் அரசியலமைப்பின் 154 ஆவது பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படுவதாகவும், கணக்காய்வாளர் நாயகத்தால் அரச நிறுவனங்கள் கணக்காய்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதால் அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முன்னெடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அரச கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழு, மற்றும் ஏனைய நிதி தொடர்பான குழுக்கள் கணக்காய்வாளர் நாயகத்தால் வெளியிடப்படும் கணக்காய்வு அறிக்கைக்கு அமைய நேரடியாக செயற்படுகிறது. இவ்வாறான நிலையில் தற்போது பாராளுமன்றத்தின் நிதி கண்காணிப்பு பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு காரியாலயத்தின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொறுப்பு, பணிகள் தொடர்பான பொறுப்பு மற்றும் கண்காணிப்புக்கான பொறுப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவருக்கு உண்டு. தற்போதைய நெருக்கடியான நிலைமையை கருத்திற் கொண்டு தாமதமில்லாமல் தகுதியான ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.





