உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை விரைவாக முடிக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
குறிப்பாக பொதுஜன பெரமுனவாக இருக்கலாம், விமல் வீரவன்சவாவாக இருக்கலாம், கம்மன்பிலவாக இருக்கலாம், ஏற்கனவே சனல் 4 வில் இவை தொடர்பில் பல்வேறு கட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை இழுத்தடிக்காது விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் கடந்த கால அரசாங்கங்கள் போல் கிடப்பில் போடக்கூடாது பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதால் போராட்டங்களும் குழப்பங்களும் எற்படுத்தப்படுகிறது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
முன்னாள் புனலாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதற்கு ஆர்பாட்டங்கள் ,குழப்பங்களை விளைவிக்கப்பட்டுவருவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மட்டக்களப்பில் கொழும்பில் பல்வேறு பட்ட இடங்களில் தேவாலயங்களில் ,நட்சத்திரக் ஹோட்டல்களில் நடைபெற்றதால் சுமார் 250 இற்கும் மேற்பட்ட இலங்கை நாட்டினரும் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஆகவே இவ்வாறான பாரிய திட்டமிட்ட தாக்குதல்களுக்கு முன்பாக இந்தத் தாக்குதல் நடைபெறவுள்ளதாக இந்தியத்தரப்பினரால் இலங்கைக்கு கூறப்பட்டுள்ளது அது மாத்திரமல்ல இத் தாக்குதலுக்கு முன்பாக மட்டக்களப்பில் பொலிஸ்ரிடம் இருந்து துப்பாக்கி திருடப்பட்டிருக்ககின்றது.
மட்டக்களப்பு காத்தான்குடியில் ஒரு மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் நடைபெற்றபோது இந்தச் சம்பவங்களை புலிகள் தான் செய்தார்கள் என்று பொய்யான கருத்து உலாவ விடப்பட்டது மாறாக இவற்றை கண்டுபிடிப்பதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை உண்மையாகவே இதன் பொருள் ஆரம்பத்தில் இருந்து திட்டமிட்ட ஒரு தாக்குதல் செயற்பாட்டை உருவாக்கியிருந்தார்கள்.
அதனுடைய கடைசி எல்லையாகத்தான் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொழும்பிலும் ,மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே தாக்குதல்களின் சூத்திரதாரியாக தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கின்ற புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே என்பவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை விடுவிக்குமாறு அவருக்கு சார்பானவர்கள், இனவாதத் தன்மைகொண்ட அரசியல் கட்சிகள் விமல் வீரவன்ச, கம்பன்பில்ல போன்றோரும் அவர்களுடன் சேர்ந்த இன்னும் பலர் . இந்த விசாரணை என்பது முடிவுக்கு வரக்கூடாது நிறுத்தப்படவேண்டும் சுரேஷ் சலே என்பவர் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோணத்தில் இவர்களிகளது சகல நடவடிக்கைகளும் அமைந்துள்ள்ளது.
இன்னும் குறிப்பாக பார்ப்போமானால் இந்த விசாரணை என்பது இன்னும் பலரை கேலி செய்ய வைத்துள்ளதுடன் இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்ற பயம் பலரிடம் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது தற்போது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாஐரா ஜபக்ச வெளிநாட்டுக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இது விசாரணையின் ஒரு அங்கமாகத்தான் இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த ஓரிரு மாங்களில் கைது செய்யப்படால் அதற்கு முன்பாக அவற்றை நிறுத்தி விடவேண்டும் என்பதற்காக இவற்றைசெய்வது மாத்திரம்மன்றி தமிழ் மக்களுக்கு மற்றும் விடுதலைப்புலிகளுக்கு போராடிய மிகப்பெரிய கதாநாயகன் என்ற ஒரு மாஜையும் உருவாக்கப்படுகின்றது.
ஆனால் இவை அனைத்தும் யுத்தம் முடிந்த பிற்பாடுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் இவர்கள் முக்கியகமாக இந்த ஒரு விசாரணை முடிவுக்கு வருமாக இருந்தால் பல அரசியல் தலைவர்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சமும் அப்படி கைது செய்யப்படுகின்றபோது மோசமான விளைவுகள் வரும் அதனால் தங்களுடைய எதிர்கால இருப்புக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அச்சப்படுகின்றார்கள்.
குறிப்பாக பொதுஜன பெரமுனவாக இருக்கலாம், விமல் வீரவன்சவாவாக இருக்கலாம், கம்மன்பிலவாக இருக்கலாம், ஏற்கனவே சனல் 4 வில் இவை தொடர்பில் பல்வேறு கட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. யார் குற்றவாளிகள் என்பது கூறப்பட்டுள்ளது அவ்வாறாள சூழ்நிலையில் இந்த விசாரணை நடத்தாது தொடர்ந்து விசாரணைகளை தடுப்பதற்கான பேக்கு இருக்கின்றது.
அது மாத்திரமில்லை. எதிர்த்தரப்பில் இருக்கக்கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனக்கூறினாலும் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச இந்த விசாளைளை முழுமையாக நடைபெறுவேண்டும் என்று ஆணித்தரமாக பேசுபவராக இல்லை அந்தச் சூழ்நிலையையும் நாங்கள் பார்க்கின்றோம்.
ஆகவே முன்னாள் புலனாய்வுத் தலைவருக்கு எதுவுமே ஆகிக்விடக்கூடாது என்ற தோரணையில் இவை நடைபெறுகின்றது. தற்போது பார்த்தால் நகைச்சுவைக்கான விடையமாக சிறைச்சாலையில் எலி ஓடுகின்றது, மூட்டை கடிக்கின்றது சிறச்சாலையில் இருக்கமுடியாது எனக்கூறப்படுகின்றது ஆனால் இதே சிறச்சாலையில் ச 25 – 30 வருட காலமாக எவ்விதமான விசாரணைகள் குற்றச்சாட்டுக்கள் இல்லாது தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் குருக்கள் உட்பட கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.
அப்போது இந்த சிறைச்சாலை வசதிவாய்பாக இருந்தது? ஆகவே இந்த தாக்குதல் சம்பந்தமான விசாரணைகள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். உண்மையானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மக்களுக்கு நியயம் கிடைக்கவேண்டும். எனவே இந்த அரசாங்கம் இதனை தெட்டத்தெளிவாக செய்து முடிக்கவேண்டும் அவர்களும் ஏனைய அரசாங்கங்களை போல் விசாரணைகளை கிடப்பில் போடுவதற்கோ இழுத்தடிக்கும் நிலைக்கோ கொண்டு செல்லாது விரைவாக விசாரணைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு என்றார்.





