சொத்து, பொறுப்பு விபரங்களை ஜூன் 30க்குள் சமர்ப்பிக்காவிடின் தண்டப்பணம் - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அனுமதிப்பெற்ற ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிக்குழாமினரும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு மாத்திரமல்ல, அது நாட்டு மக்களின் தலையாய கடமையாகும்.இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் தகுதியுடைவோர் தமது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் தண்டப்பணத்துக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவது குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டிய உத்தியோகத்தர்கள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை முன்வைக்க வேண்டும். ஜூன் 30 ஆம் திகதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை முன்வைக்காவிடின் தண்டபணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
தண்டணபத்தின் தொகை எதிர்பாராத அளவிற்கு அதிகளவானதாக காணப்படலாம். சட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் பிரகாரம் ஜீன் 30 ஆம் திகதிக்கு முன்னர் தகுதியுடையவர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வருடாந்த விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களை போன்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கோப்புக்களுடன் விபரங்களை ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை.மத்திய மயப்படுத்தப்பட்ட இலத்திரனியல் முறைமையின் ஊடாக விபரங்களை சமர்ப்பிக்க முடியும்.இந்த புதிய இலத்திரனியல் கட்டமைப்புக்கு பதிவாகியுள்ளவர்களின் வீதம் குறைவானதாகவே காணப்படுகிறது. ஆகவே புதிதாக விபரங்களை வெளிப்படுத்த தகுதியுடையவர்கள் விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு தரப்பினர் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பிலான வெளிப்படுத்தல்கள் குறித்து அக்கறையில்லாமல் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள்,பத்திரிகை செய்தி கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பீட உறுப்பினர்கள்,
அனுமதிப்பெற்ற ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிக்குழாமினரும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு மாத்திரமல்ல, அது நாட்டு மக்களின் தலையாய கடமையாகும்.இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் தகுதியுடைவோர் தமது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.இல்லையேல் தண்டப்பணத்துக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும் என்றார்.





