கன் சைட் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாமை சீல் வைக்க தீர்மானம்
கேகாலையைச் சேர்ந்த சாந்தா தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது.
திருகோணமலை கடற்படை தளத்திற்குள் அமைந்துள்ள 'கன் சைட்' என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாம் வளாகத்தை சீல் வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.திருகோணமலை நீதிவான் இன்று (18) இந்த இடத்திற்கு உத்தியோகபூர்வ பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காக விஜயம் செய்யவுள்ளார்.
இந்த முகாமில் சுமார் 60 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு,கப்பம் கோரப்பட்டதோடு,மேலும் பல கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிவான் இன்று (18) இந்த இடத்திற்கு உத்தியோகபூர்வ பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காக விஜயம் செய்யவுள்ளார். 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான தற்போதைய நீதிமன்ற வழக்குக்கு மேலதிகமாக, மேலும் பல நபர்கள் இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான புதிய சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கேகாலையைச் சேர்ந்த சாந்தா தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது. கொழும்பில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் கொழும்பு இலக்கம் 3 நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களும், அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்போது நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலங்களை வழங்க முன்வந்துள்ளதாக அறிய முடிகிறது.





