Breaking News
இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் முடித்து வைப்பு
தேசிய கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் ஷம்மி சில்வா இந்த மனுவை முன்வைத்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழுவை நியமிக்குமாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் முடித்து வைத்தது.
தேசிய கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் ஷம்மி சில்வா இந்த மனுவை முன்வைத்திருந்தார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நியாயமானதாகக் கருதப்படும் சட்டத் தேவை எழுந்தால், மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை மீண்டும் கூட்டுவதற்கு அனுமதிக்க நீதிபதி பெஞ்ச் முடிவு செய்துள்ளது.





