Breaking News
கெஹலியவின் இரண்டு வங்கிக் கணக்குகளில் ரூ. 20 மில்லியன் இருப்பு முடக்கப்பட்டது
சம்பந்தப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளின் மொத்த இருப்பு சுமார் ரூ. 20 மில்லியன் ஆகும்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இரண்டு நடப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளை ஒரு வார காலத்திற்கு முடக்குவதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளின் மொத்த இருப்பு சுமார் ரூ. 20 மில்லியன் ஆகும்.
2023 ஆம் ஆண்டு இலக்கம் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53(1) பிரிவின்படி, இந்த இடைநிறுத்தம் செவ்வாய்கிழமை (17) முதல் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டது.
இடைநிறுத்த உத்தரவு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட்டவுடன் அதனை நீடிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.





