செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்றைய தினம் (19) யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை இதுவரை 350 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணக்கார முதன்முறையாக 19-06-2026அன்று அம்மனிதப்புதைகுழிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் திணைக்கள ஆய்வாளர்கள், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட தரப்பினரிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார். இது இவ்வாறிருக்க செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனவும், சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் எனவும் வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் செம்மணியில் கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்றைய தினம் (19) யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை இதுவரை 350 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணக்கார முதன்முறையாக 19-06-2026 அன்று அம்மனிதப்புதைகுழிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார்.
அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் திணைக்கள ஆய்வாளர்கள், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட தரப்பினரிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார்.
இது இவ்வாறிருக்க செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனவும், சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் எனவும் வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் செம்மணியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.





