அவுஸ்திரேலியாவினால் ஊட்டச்சத்து பிஸ்கட் விநியோகம்
அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு சொந்தமான டுபாயில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து குறித்த பிஸ்கட் தொகுதி நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மற்றும் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் ஊட்டச்சத்து மட்டத்தை ஸ்திரப்படுத்துவதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 10.2 மெற்றிக் தொன் மேலதிக ஊட்டச்சத்துள்ள பிஸ்கட் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் நிலையை கருத்திற்கொண்டு உலக நாடுகள் பல இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அந்தவகையில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் தலையீட்டுடன், உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து அவுஸ்த்திரேலியா மேலதிக ஊட்டச்சத்து பிஸ்கட்களை நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
அதற்கமை 10.2 மெற்றிக் தொன் எடையுள்ள முதலாவது பிஸ்கட் தொகுதியானது, 07-12-2025 அன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-226 என்ற விமானம் மூலம் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு சொந்தமான டுபாயில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து குறித்த பிஸ்கட் தொகுதி நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் மேற்படி உதவித் திட்டத்தின் கீழ், 70 மெற்றிக் தொன் பிஸ்கட்களை இலங்கைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அவற்றின் மதிப்பு சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.





