நிவாரண பொருட்களுடன் இலங்கையை வந்தடைந்த மியன்மார் விமானப்படை விமானம்
இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா மற்றும் விமானப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் Y-8 விமானம் 07-12-2025 அன்று காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.
இவற்றில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன அடங்கும். இதனை மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் மார்லர் தான் ஹ்தைக், மியான்மர் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் ஜெனரல் சாவ் பியோ வின் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா மற்றும் விமானப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களை இடம்பெயரச் செய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கை பல நாடுகளிடமிருந்து அவசரகால உதவிகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மியன்மார் தனது உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





