பொருளாதார சீர்திருத்தங்களை மீளாய்வு செய்ய நாணய நிதியக்குழு 24இல் இலங்கை வருகை
இந்த விஜயத்தின் ஊடாக இலங்கை அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ, பலனுள்ள பேச்சுவார்த்தைகளை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாயண நிதிய தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜியோர்ஜியு மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான உத்தியோகபூர்வ அதிகாரிகள் மட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜியோர்ஜியு தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இந்த விஜயத்தின் போது, நாட்டின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சீர்திருத்த திட்டங்களின் தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிவில் சமூகப் பங்குதாரர்களுடன் குறித்த குழுவினர் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
அத்துடன், இந்த விஜயத்தின் ஊடாக இலங்கை அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ, பலனுள்ள பேச்சுவார்த்தைகளை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாயண நிதிய தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜியோர்ஜியு மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் (19) வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக சிறுபான்மையினர் அமைச்சர் ஏ. எம். ஷாஜஹானை சந்தித்து, அமைச்சராக பொறுப்பேற்றதற்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை சபாநாயகர் மடத்தில் சென்று பார்வையிட்டார்.





