அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் கட்டளை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கைக்கு விஜயம்
இந்த பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பினைப் பேணிப்பாதுகாப்பதற்கான ஒன்றுபட்ட முயற்சியில் இலங்கை ஒரு இன்றியமையாத பங்காளரென அமெரிக்கா அங்கீகரிக்கிறது.
அமெரிக்க-இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்துவரும் பலத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் 22-06-2026அன்று இலங்கையை வந்தடைந்தார்.
ஜெனரல் கெவின், கட்டளை தளபதியாக, இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க விமானப்படை அதிகாரிகளையும், சொத்துக்களையும் ஜெனரல் ஷ்னைடர் மேற்பார்வை செய்கிறார்.
மூன்று நாள் விஜயத்தின் போது கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் உட்பட, சிரேஷ்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறைத் தரப்பினருடன் சந்திப்புகளை மேற்கொள்வார் .
இந்த சந்திப்புக்களில் வான் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு, பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்பு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் விரிவான ஒத்துழைப்பின் மீது கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஜெனரல் ஷ்னைடரின் இவ்விஜயமானது, கூட்டுப்பயிற்சிகள், இராணுவ பரிமாற்றங்கள், மற்றும் நிலையான சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு விரிவடைந்து கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகளில், மிக சமீபத்திய மைல்கல்லாகும். இந்த பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பினைப் பேணி பாதுகாப்பதற்கான ஒன்றுபட்ட முயற்சியில் இலங்கை ஒரு இன்றியமையாத பங்காளரென அமெரிக்கா அங்கீகரிக்கிறது.
ஜப்பான், தென் கொரியா, ஹவாய், அலாஸ்கா மற்றும் குவாம் ஆகியவற்றில் கடமையாற்றும் 46,000இற்கும் அதிகமான விமானப்படையினருக்கு உதவிசெய்யும் ஒரு கட்டளைப்பீடத்திற்குரிய, உலகின் அரைவாசிக்கும் அதிகமாக பரந்து விரிந்திருக்கும் பகுதியில் மேற்கொள்ளப்படும் விமானப்படை நடவடிக்கைகளுக்கு அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் பொறுப்பானதாகும்.





