இடமாற்றம் செய்யப்படவுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம்
கனேடிய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிவிப்பின் பிரகாரம், தற்போது அமைந்துள்ள 5 ஆவது ஒழுங்கையில் இருந்து கொழும்பு 07 இல் உள்ள ஸ்ரீமத் ஆர்.ஜி.சேனாநாயக்க மாவத்தையில் புதுப்பிக்கப்பட்டுள்ள வளாகத்துக்கு உயர்ஸ்தானிகரகம் மாற்றப்படவுள்ளது.
கொழும்பிலுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகரகம், ஸ்ரீமத் ஆர்.ஜி.சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 07 இல் புதுப்பிக்கப்பட்ட வளாகத்துக்கு உயர்ஸ்தானிகரத்தை இடமாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிவிப்பின் பிரகாரம், தற்போது அமைந்துள்ள 5 ஆவது ஒழுங்கையில் இருந்து கொழும்பு 07 இல் உள்ள ஸ்ரீமத் ஆர்.ஜி.சேனாநாயக்க மாவத்தையில் புதுப்பிக்கப்பட்டுள்ள வளாகத்துக்கு உயர்ஸ்தானிகரகம் மாற்றப்படவுள்ளது.
அதேபோன்று இந்த இடமாற்றமானது இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கங்களுடனும் பொதுமக்களுடனுமான நல்லுறவை வலுப்படுத்துவதில் கனடா கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் உயர்ஸ்தானிகரகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 23 -06-2026 அன்றிலிருந்து சகல சந்திப்புக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் என்பன இலக்கம் 06, ஸ்ரீமத் ஆர்.ஜி.சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 07 என்ற புதிய முகவரியின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என்றும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.