மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஆராய்வு
குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைவரம், பரந்துபட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைவரம், பரந்துபட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.
இவ்விஜயத்தின்போது மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்புக்களின் ஓரங்கமாக 24-03-2026அன்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை சந்தித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா, அவருடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.
குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைவரம், பரந்துபட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமை;சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





