மேற்கு ஆசிய மோதல்களின் பின்விளைவுகள் குறித்து இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு
குறிப்பாக தற்போதைய மேற்கு ஆசிய மோதல்களினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஆசிய மோதல்களினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக தற்போதைய மேற்கு ஆசிய மோதல்களினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி 'அயலகத்துக்கு முதலிடம்' மற்றும் 'மகா சாகர்' ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்துவதில் இந்தியா அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.





