Breaking News
மருந்துகளின் விலைகளை 25 சதவீதத்தால் அதிகரிக்க கோரிக்கை
அனைத்துச் செலவுகளையும் கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளை ஆகக்குறைந்தது 25 சதவீதத்தாலாவது அதிகரிக்குமாறு மருந்து நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி உயர்வு, கப்பல் கட்டணங்கள் மற்றும் மருந்து உற்பத்தி மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.





