பிராந்திய ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு வழங்கப்படும் - அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடமேல் மற்றும் வட மத்திய மாகாண ஏற்றுமதியாளர்களை ஒன்றிணைக்கும் பிராந்திய வலையமைப்பு மாநாடு அண்மையில் சிலாபத்தில் நடைபெற்றது.
பிராந்திய மட்டத்தில் ஏற்றுமதித் துறையின் விரைவான வளர்ச்சியை எட்டும் நோக்கில் ஏற்றுமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய கால தீர்வுகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை எதிர்ப்பாகும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடமேல் மற்றும் வட மத்திய மாகாண ஏற்றுமதியாளர்களை ஒன்றிணைக்கும் பிராந்திய வலையமைப்பு மாநாடு அண்மையில் சிலாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிராந்திய ஏற்றுமதித் திறன்களை மேம்படுத்துவதும் பிராந்திய ஏற்றுமதியாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையே நேரடி தொடர்பு சங்கிலியை உருவாக்குவது மற்றும் பிராந்திய மட்டத்தில் ஏற்றுமதித் துறையின் விரைவான வளர்ச்சியை எட்டும் நோக்கில் ஏற்றுமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய கால தீர்வுகளை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை எதிர்ப்பாகும். குறிப்பாக சுங்க நடைமுறைகள் சட்ட மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை கண்டவறிதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இத்தகைய பிராந்திய மட்டத்திலான வேலைத்திட்டங்களின் ஊடாக புதிய யோசணைகள், ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை திரட்டி நாட்டின் ஏற்றுமதித் துறையை மேலும் வலுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் மிக முக்கிய சிறப்பம்சம் எதுவென்றால் பங்கேற்ற ஏற்றுமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட நாட்டின் முதன்மை அரச நிறுவனங்ளின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தங்களது தொழில்சார் சவால்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தமையாகும். இந்த நேரடித் தொடர்பாடல் மற்றும் ஈடுபாட்டின் மூலம் கிராமப்புற உற்பத்தியாளர்களை சர்வதேச சந்தை வாய்ப்புகளுடன் நேரடியாக இணைப்பதற்கான முறையான அடித்தளம் இடப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் நியாயமானதும் சமத்துவமானதுமான ஏற்றுமதி முறைமை ஒன்றை உருவாக்குவதற்கும், பிராந்திய அளவில் வலுவான விநியோகச் சங்கிலியைக் கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கிறது என்றார்.





