பிள்ளையானை சிறையில் சந்தித்தது ஒன்றும் இரகசியமல்ல: நாமல் ராஜபக்ஷ
அரசியல் நாடகத்தை தவிர்த்த முறையான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பிரான்ஸ் வரை பயணித்ததாகக் கூறப்படும் விடயம், இயல்பாகவே அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானை நான் சந்தித்ததை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே அதிகாரிகள் அவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார்கள் என்றால், அது நிச்சயமாக பொதுப் பணத்தை வீணடிக்கும் ஒரு செயலாகும்.சிறையில் இருந்த பிள்ளையானை நான் சந்தித்தது ஒன்றும் இரகசியமல்ல, அரசியல் நாடகத்தை தவிர்த்த முறையான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையானை மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நேரில் சென்று சந்தித்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துள்ளதை தொடர்ந்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..





