திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு.
தமிழக அமைச்சர்களாக இன்று பதவியேற்ற விசிக எம்எல்ஏ வன்னியரசுக்கும், ஐயூஎம்எல்ஏ ஷாஜஹானுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடவே, அவர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து கடுஞ்சொற்களால் விமர்சிக்க வேண்டாம் என்று திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னியரசுக்கும், ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே திமுகவினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.





