அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படும் சூழல் தோற்றம் பெற்றுள்ளது - பொலிஸ்மா அதிபர்
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுயாதீனமாக செயற்படும் சூழல் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.பொலிஸ் உத்தியோக்தர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
களுத்துறை பொலிஸ் கல்லூரியில் 'மாகாணசபை முறைமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்புக்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடல், போதைப்பொருளுக்கு அடிமையாதல், துர்நடத்தையான செயற்பாடுகளில் ஈடுபடல், தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாதல் மற்றும் இணைய மோசடிகளில் ஈடுபடல் உள்ளிட்ட ஐந்து காரணிகளால் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தொழிற்றுறை பாதிக்கப்படலாம்.
அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுயாதீனமாக செயற்படும் சூழல் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.பொலிஸ் உத்தியோக்தர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோதமான முறையில் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் அண்மையில் பதவி நீக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் எந்நிலையிலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நிறுவன மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





