உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற தயாராகும் சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அரசால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு சுதந்திர வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தனது உடமைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அரசால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய அவர் நேற்றைய தினம் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
அடுத்த சில நாட்களுக்குள் அவர் அந்த வதிவிடத்திலிருந்து முழுமையாக வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.