Breaking News
கிருஷாந்தி படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் காலை 9மணிக்கு நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் நடைபெற்று 9.30க்கு நினைவுப் பகிர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு செம்மணி அணையா விளக்குத்திடலில் நடைபெறவுள்ளது.
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் காலை 9மணிக்கு நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் நடைபெற்று 9.30க்கு நினைவுப் பகிர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
10மணிக்கு “வாசலிலே கிருசாந்தி” என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு செய்யப்படவுள்ளதோடு 10.30க்கு ஆவண காட்சிப்படுத்தல் நடைபெறவுள்ளது.