டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் அஸ்வெசும தகவல் புதுப்பியுங்கள்: நலன்புரி நன்மைகள் சபை
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெற வேண்டியவர்களின் பெயர் பட்டியலை வருடத்துக்கு ஒரு தடவை புதுப்பித்தல் அவசியமாகும்.
அஸ்வெசும முதற்கட்டத்தில் பதிவு செய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மற்றும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத சகலரும் தமது தகவல்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் கட்டாயம் புதுப்பித்தல் வேண்டும். இந்த காலவகாசம் எக்காரணிகளுக்காகவும் நீட்டிக்கப்படாது என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மற்றும் கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் சகலரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலவகாசம் 2025.12.31 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
அஸ்வெசும முதற்கட்டத்தில் பதிவு செய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மற்றும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத சகலரும் தமது தகவல்களைக் கட்டாயம் புதுப்பித்தல் வேண்டும்.
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெற வேண்டியவர்களின் பெயர் பட்டியலை வருடத்துக்கு ஒரு தடவை புதுப்பித்தல் அவசியமாகும். அத்துடன், தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் பயனாளிகளுக்கு அவர்களது அஸ்வெசும கொடுப்பனவுகள் இழப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
தகவல்களை புதுப்பிப்பதற்கான காலம் 2025.12.31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், எக்காரணிகளுக்காகவும் காலம் நீடிக்கப்படமாட்டாது.
https:// www.eservices.wbb.gov.lk என்ற இணையத் தளத்துக்குப் பிரவேசித்து இணைய வழியாக (online ) தகவல்களைப் புதுப்பிக்கலாம், உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவகர் அல்லது அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தரைத் தொடர்புக் கொண்டு தொழில்நுட்ப உதவியினைப் பெற்று இணைய வழியாகத் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தமக்குரிய பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவிடம் ஒப்படைப்பதன் மூலமும் தமது பிரதேசத்திலுள்ள தொடர்பாடல் மையங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில்நுட்ப உதவியினைப் பெற்று இணைய வழியாகத் தகவல்களை புதுப்பிக்கலாம்.
இதுவரை தமது தகவல்களைப் புதுப்பிக்காத நபர்கள் தாமதமின்றி 2025.12.31 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை நிறைவு செய்ய வேண்டும்.





