வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம்; வருடத்தின் முற்பகுதியில் விசாரணை
சிறைச்சாலை இட நெரிசலை குறைப்பதற்கு தேவையான சட்டம் மற்றும் பெளதிக வசதிகளை வழங்கி, அவற்றை புதுப்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குவோம்.
எதிர்வரும் மாதத்தில் மக்கள் அரசாங்கப்பணிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் அனைத்து படிவங்களையும் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் வருடத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் ஹரிஷன நாணயக்கார தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் புதிய வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 01-01-2026 அன்று இடம்பெற்றது. இதன்போது அங்கு அமைச்சு ஊழியர்களுடன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவிதார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டில் நாம் நுழையும் வேளையில், அரசாங்கம் ஒரு தெளிவான திசையை தயாரித்துள்ளது. அதாவது, முறையாக அனைவரையும் உள்ளடக்கிக்கொண்டு நிலையான இலங்கையை கட்டியெழுப்புவதாகும். இந்த தேசிய நடவடிக்கையுடன் எமது அமைச்சும் மூன்று முறைகளில் இணைந்திருக்கிறது.
முதலாவது, கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதாகும்.. நவீன நீதி கட்டமைப்பை பொதுமக்கள் அஞ்சும் நிலையிலிருந்து நம்பிக்கை கொள்ளும் இடமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை நாம் அமைக்க வேண்டும். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். என்றாலும் முறையற்ற நீதி என்பது நீதியை முற்றிலுமாக அழித்துவிடுவதாகும். அதனால் வழக்கு விசாரணைகளை முகாமைத்துவம் செய்வதற்காக டிஜிட்டல் செயல்முறைகளின் பயன்பாட்டை மேற்கொள்ளல், சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டும் நிறுவனங்களின் தொடர்பாடல்கள் மற்றும் விஞ்ஞான மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.
அதற்காக இந்த வருடம் முடிவடையும்போது நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையை பூரணப்படுத்தல் மற்றும் ரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குவதற்கு தற்போது எடுக்கும் காலத்தை குறைக்கவும் செயலாளருடன் கலந்துரையாடுவேன். நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை செயற்திறமையுடன் மேற்கொள்ள தேவையான சட்டங்களை கொண்டுவருவதல், சிறைச்சாலை இட நெரிசலை குறைப்பதற்கு தேவையான சட்டம் மற்றும் பெளதிக வசதிகளை வழங்கி, அவற்றை புதுப்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குவோம்.
இரண்டாவது, தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் சமூக நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவதாகும். பிரிந்து இருப்பதற்கு பதிலாக ஒற்றுமையின் மூலம் உயிர்களை பாதுகாத்தோம் என்பதை தித்வா புயல் அனர்த்தம் எமக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு எமது நாளாந்த நடவடிக்கையாக இருக்கவேண்டும். நியாயமான மொழி அணுகல், சமமான சேவை வழங்கல், கெளரவமான முறையில் சட்டத்தை செயற்படுத்தல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கை அமைப்பது இவற்றில் முன்னுரிமையாகும்.
பிரஜை ஒருவருக்கு தங்களது மொழியில் கேட்கப்படுவதை உணரும்போது, சட்டத்தால் சமமாக நடத்தப்படுகையில், அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் பாதுகாக்கப்படுவதை உணரும்போது அது தேசிய ஒருமைப்பாட்டையே செயலில் காட்டுகிறது. எதிர்வரும் மாதத்தில் மக்கள் அரசாங்கப்பணிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் அனைத்து படிவங்களையும் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு வருடத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
மூன்றாவது, நிறுவன கலாசாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாகும்.. இது மிகவும் கடினமான பணி. ஆனால் மிக முக்கியமான பணி. நிறுவன கலாசாரம் என்பது கட்டளையிட யாரும் இல்லாதபோதும் சரியான முடிவுகளை எடுப்பதும் திறம்பட செயல்படுவதுமாகும். ஒருவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்,எவ்வாறு பொறுப்புகளை பகிர்ந்து கொள்கிறார், தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றை சரி செய்துகொள்வதற்கு செயற்படும் முறையாகும். ஒரு நல்ல நிறுவனம் ஒன்றின் கலாசாரம் கட்டியெழுப்பப்படுவது நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் கெளரவத்தின் அடிப்படையிலாகும்.
எனவே 2026 ஆம் ஆண்டில், நாம் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை நோக்கி நகர வேண்டும், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதில் இருந்து மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளல் வரை அரச சேவை கலாசாரத்துக்கு பிரவேசிக்க வேண்டும் என்றார்.





