2026ஆம் ஆண்டுக்கான பிரஜைகள் வரவு, செலவுத்திட்டம் ‘ஒருபார்வை’
அவ்வப்போது தொலைத்தொடர்பு வரிகள் தொடர்பாக செய்யப்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தொலைத்தொடர்பு வரிச் சட்டத்தை திருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்படும் 1,350 ரூபாவைக் கொண்ட நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை அடுத்த வருடம் ஜனவரியில் இருந்து ரூபா 1,550 ஆக அதிகரிப்பதற்கும் இதற்குமேலதிகமாக வேலைக்கு சமுகமளிப்பதை நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 200 தொகையினை அரசாங்கத்தினால் வழங்குவதற்கும் ஜனாதிபதி வரவு, செலவு திட்டத்தில் யோசனை முன்வைத்தார். இதற்காக 5இ000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பாகவும் வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஆம் ஆண்டில்மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமைய, இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார் . அதற்கமைய, இச்சம்பளங்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த வருடம் ஜனவரி தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியங்கள் 2019 ஆம் ஆண்டின் சம்பள கட்டமைப்பின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படும். இத் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தைஅடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் செலுத்துவதற்கு ரூபா 20இ000 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.
அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மகாபொல மற்றும் மாணவ உதவுதொகை கொடுப்பனவுகளை 2,500 ரூபாவினால் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கமையஇ மாதாந்த மகாப்பொல கொடுப்பனவு ரூபா 10இ000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கரை மணிநேரம் வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து உரையாற்றினார்.
அதன்படி அடுத்த வருட வரவு– செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் வருமாறு:
விவசாய அபிவிருத்திக்காக 1700 மில்லியன் ரூபாவும் நீரியல் வளப் பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்காக 3500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கிடப்படும்.
சுற்றுலா தொழில் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவைகளை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச வர்த்தக முகாமைத்துவச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக, வழங்கப்பட்ட வரி விலக்கு அறிக்கைகள் வருடத்திற்கு இருமுறை நிதி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் எவ்வளவு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் பார்க்க முடியும்.
முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபா வழங்கப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வதிவிட விசா முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்பான புதிய முறைமை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. சிறிய மற்றும் நடுத்த அளவிலான தொழில்முனைவோருக்கு 5900 மில்லியன் ரூபா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறை அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ஒதுக்கப்படும்.
டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளோம். டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவையை ஸ்தாபிக்கப்படுவதுடன் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு தரவு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அஸ்வெசும பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்காக இணைய சேவை வவுச்சர் வழங்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்ப கோபுரங்களை அமைப்பதற்கு முதலீட்டு வரியை 5 வருடங்களுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 6500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
தோட்டத்தொழிலாளர்களின் ரூபா 1,350 கொண்ட தற்போதைய நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 2026 ஜனவரியில் இருந்து தொடக்கம் ரூபா 1,550 ஆக அதிகரிப்படும். ரூபா 1,550 தொகை சம்பளத்திற்கு மேலதிகமாக வேலைக்கு சமுகமளிப்பதை நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 200 தொகையினை அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிகின்றோம். அதற்காக ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000 கொண்ட மாதாந்த் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.
சப்பிரகமுவ, மொரட்டுவ, உருகுணை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்காக ரூபா 11,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ரூபா 11,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்கலை மாணவர்களின் மாதாந்த மகாப்பொல கொடுப்பனவு ரூபா 10,000 ஆகவும் மாணவர் உதவுதொகை கொடுப்பனவு ரூபா 9,000 ஆகவும் அதிகரிக்கப்பபடும்.
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31இ000 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது. 16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும். அதன் மொத்த செலவினம் 12,000 மில்லியன் ரூபாவாகும். சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 4.2 பில்லியன் ரூப
ஒதுக்கிடப்படும்.விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்கு 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 2030 இல் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சாத்தியவள ஆய்வு உள்ளிட்ட ஆரம்பப் பணிகளுக்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும்.
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகமை வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு 66,150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
பரந்த அளவிலான வீதிப் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை அமல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 1இ000 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும்.
அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கான தற்காலிக தீர்வை வழங்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் 2,000 வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 4,290 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச சேவைக்கு 75இ000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே 3 கட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில்மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமையஇ இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இச் சம்பளங்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2026சனவரி தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வூதிய திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தில்இ 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியங்கள் 2019 ஆம் ஆண்டின் சம்பள கட்டமைப்பின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படும். இத் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை 2026 ஜூலை மாதம் முதல் செலுத்துவதற்கு ரூபா 20,000 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஆதனக் கடன் திட்டத்தினை ரூபா 50இலட்சம் வரை வழங்குவதற்கான புதியதொரு கட்டமைப்பின் கீழ் நடைமுறைபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விடயத்தில் ஆரம்ப ரூபா 30இலட்சம் வரை 4 சதவீத வட்டிச் சலுகையிலும், ரூபா 30இலட்சத்திலிருந்து ரூபா 50இலட்சம் வரை 2 சதவீத வட்டிச் சலுகையிலும் கடன்களை வழங்குவதற்கு ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகிறோம்.
வாகனங்கள் விற்பனையின் போது அறவிடப்படும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு முறையாக அறவிடப்படுவதில்லை என்பது அவதானிக்கப்படுகின்றது. எனவேஇ வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது உற்பத்தி மற்றும் விற்னையின் போது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை சேகரித்து, விற்பனைக்குப்பின்னான சந்தர்ப்பத்தில் இந்த வரியை விலக்களிக்க முன்மொழிகின்றேன். இதனை 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. உள்ளூர் துணி உற்பத்திகள் பெறுமதிசேர் வரிக்கு உட்படுவதுடன்இ இறக்குமதி செய்யப்படுகின்ற துணிகள் பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போதிலும், கிலோ கிராமிற்கு 100 ரூபா செஸ் வரி அறவிடப்படுகின்றது. சமமான போட்டிமிகு நிலையை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக பெறுமதி சேர் வரியை விதிப்பதற்கும் முன்மொழியப்படுகின்றது. இது 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுன்றது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதானவிசேட பண்ட அறவீட்டை நீக்கி, அதற்குப் பதிலாக பெறுமதிசேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கும் முன்மொழிகின்றோம். இம் முன்மொழிவு 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுகின்றது.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணமான ரூபா 10,000 இனைரூபா 15,000 ஆக அதிகரிப்பதற்கு நாம் முன்மொழிகிறோம். வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
600 பஸ்களை கொள்வனவு செய்ய 3600 மில்லின் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஹிங்குரக்கொட, சிகிரியா மற்றும் திருகோணமலை உள்ளூர் விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கும், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். நேரடி வரி மற்றும் மறைமுக வரி விகிதங்களை 60:40 என்ற விகிதத்திற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டளவில் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 வீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால நோக்கில் இந்த இலக்கை 20 வீதம் வரை அதிகரிப்பதே நோக்கமாகும். 2032 ஆம் ஆண்டுக்குள் அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன்விகிதத்தை 90 இற்குக் கீழ் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. 7 வீத பொரளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 210 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைக்கப்படும்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான ஒரு கிலோகிராமுக்கு ரூ. 100 என்ற வரி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வற் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போதும், உற்பத்தி செய்யும் போதும், விற்பனை செய்யும் போதும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியைச் செலுத்துவதற்கும், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளின் போது அந்த வரியை விலக்களிப்பதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும்.
தேசிய கட்டணக் கொள்கையின் கீழ்இ சுங்க இறக்குமதி வட்டி விகிதங்களை 0மூஇ 10மூஇ 20மூ மற்றும் 30மூ என திருத்துவதற்கும்இ வருவாய் இழப்பைக் குறைக்கும் அதேவேளையில்இ துணைத் தீர்வைகளை (pயசய-வயசகைகள) படிப்படியாக நீக்குவதற்கான திட்டத்துடனும் முன்மொழியப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு அமலாகும் வகையில், அரசாங்கம் ஒரு நவீன வரித் தணிக்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்தும்.
அவ்வப்போது தொலைத்தொடர்பு வரிகள் தொடர்பாக செய்யப்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தொலைத்தொடர்பு வரிச் சட்டத்தை திருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்குள் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரின் நிறுவன வளத் திட்டமிடல் மற்றும் வருவாய் நிர்வாக மேலாண்மை முறைமைக்கும் இடையில் தடையற்ற இணைப்பைச் செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய அலுவலக வளாகத்தை பொருத்தமான இடத்தில் நிறுவ 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





