புதிய கல்விக் கொள்கையில் தன்பாலினம் கல்வி இல்லை: பிரதமர் ஹரிணி
புதிய கல்விக் கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்களா என்ற சந்தேகமும் காணப்படுகிறது.
தன்பாலினத்தவர் சட்டத்துக்கும், புதிய கல்வி கொள்கைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. புதிய கல்விக் கொள்கையில் தன்பாலினம் தொடர்பில் உள்ளடக்குவதாக எவ்விடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. ஒருசிலரின் தவறான கருத்துக்கள் ஏற்புடையதல்ல, புதிய கல்விக் கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது என கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 04-01-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்பு நாளை முதல் ஆரம்பமாகும் கல்வி தவணையில் ஆரம்பமாகும்.புதிய கல்விக் கொள்கை தொடர்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் எவரும் 6 ஆம் தர பாடநூலின் சர்ச்சைக்குரிய விடயம் பற்றி குறிப்பிடவில்லை. சிலவேளை அவர்களும் அறிந்திருக்காமல் இருக்கலாம்.
இந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் அறிந்தவுடன் அந்த பாடப்புத்தகங்கள் அடங்கிள களஞ்சியசாலை முத்திரை பதிக்கப்பட்டது. பாடசாலைகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை.தரவு நிலை தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் தேசிய கல்வி நிறுவகம் ஊடாகவும் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மாறாக கல்வி அமைச்சின் செயலாளரினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்களா என்ற சந்தேகமும் காணப்படுகிறது.
தன்பாலினத்தவர் சட்டத்துக்கும், புதிய கல்வி கொள்கைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. புதிய கல்விக் கொள்கையில் தன்பாலினம் தொடர்பில் உள்ளடக்குவதாக எவ்விடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. ஒருசிலரின் தவறான கருத்துக்கள் ஏற்புடையதல்ல.
புதிய கல்வி கொள்கை நான்கு கட்டமாகவே அமல்படுத்தப்படும். எதிர்கால உலகுக்கும், போட்டியான தொழிற்றுறைக்கும் பொருத்தமான வகையில் இலவச கல்வியின் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். புதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் விமர்சனங்களை எதிர்கொள்வது ஒன்றும் புதிதல்ல, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ளும் நிபந்தனைக்காக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் என்றார்.





