கனடா உயர்ஸ்தானிகர் மேல்மாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கும் மேல் மாகாண ஆளுநரும் முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் சிறப்பு தூதுவருமான ஹனீப் யூசுப்புக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கனடாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கும் மேல் மாகாண ஆளுநரும் முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் சிறப்பு தூதுவருமான ஹனீப் யூசுப்புக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாது, இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவான சாதகமான சூழ்நிலையை உருவாக்குவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவும் இக்கலந்துரையாடல் மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.